Pages

Tuesday, January 18, 2022

பச்சை மயில் வாஹனனே - Pachai mayil vaganane siva balasubramanyane va..

 பச்சை மயில் வாஹனனே

சிவ பாலசுப்ர மணியனே வா

என் இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன்

எள்ளளவும் பயமில்லயே

அலைகடல் ஓரத்திலே – எங்கள்

அன்பான சண்முகனே 

அலையா மனம் தந்தாய் – உனக்கு

அனந்த கோடி நமஸ்காரம்.

கொச்சை மொழியானாலும் – உன்னை

கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்

இங்கு சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா – எங்கும்

சாந்தி நிலவுதப்பா 

வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்

தண்ணி போல் உள்ளந்தனிலே – நீ

மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்

கள்ளமெல்லாம் கரைந்ததப்பா

நெஞ்சமதில் கோயில் அமைத்தேன்– அங்கு

நேர்மையெனும் தீபம் வைத்தேன்

செஞ்சிலம்பு கொஞ்சும் வேலா – முருகா

சேவல் கொடி மயில் வீரா

செந்தூர் கடலோரம் 

முருகா சிங்கார மயில்வாகனா

செந்தூர பொட்டழகா 

உந்தன் சேவடியில் நான் சரணம்..

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா - Chinna Chinna muruga muruga singara muruga

 பாலும் தேன் அபிஷேகமும்

பக்தர்களின் காவடியும் 

பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்

பரங்கிரி தேவனாகி 

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன 

ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன 

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

செந்தூர் கடற்கரையில் 

பக்தர்களை காத்திடவே 

பார்ப்பவர்கள் மனம் மகிழ 

சூரணை சம்ஹாரம் செய்தாய் 

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன 

ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன 

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

ஆண்டவனே அலங்காரனே

அண்டமெல்லாம் வலமும் வந்தாய் 

அடியார்கள் காணும் போதே 

ஆண்டியாய் நீ காட்சி தந்தாய் 

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன 

ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன 

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

அப்பனுக்கு உபதேசித்தாய் 

என் அருமை குரு நாதனுமாய் 

சுவாமி மலையில் அமர்ந்தவனே 

சுவாமிநாத குருவே அப்பா 

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன 

ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன 

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

சேணைக்கு அதிபதியாய் 

தேவர்களை காத்திடவே 

திருத்தணிகை மலைதனிலே 

திருமண கோலம் கொண்டாய்  

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன 

ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன 

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

முக்திக்கு வழிதேடியே

முதியோரும் இளைஞர்களும் 

மலைகள் எல்லாம் ஏறிவந்தோம் 

மாதவன் மருகனே நீ வா..

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஆ சின்ன 

ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன 

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா