Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - வள்ளிப் பாட்டு - 2

வள்ளிப் பாட்டு - 2

    ராகம் -கரஹரப்ரியை தாளம்-ஆதி

    பல்லவி

    உனையே மயல் கொண்டேன் -வள்ளீ!
    உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்! (உனையே)

    சரணம்

    எனை யாள்வாய், வள்ளீ! வள்ளீ
    இளமயி லே! என் இதயமலர் வாழ்வே!
    கனியே! சுவையுறு தேனே
    கலவியி லேஅமு தனையாய், - (கலவியிலே)
    தனியே, ஞான விழியாய்! - நிலவினில்
    நினமருவி, வள்ளீ, வள்ளீ!
    நீயா கிடவே வந்தேன். (உனையே)

No comments:

Post a Comment